குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Wednesday, 7 August 2013

சேரன் - டி , ராஜேந்தர் இருவரும் முதலில் தகப்பனே.

வணக்கம் 

புகழின் விலை சமயத்தில் மிகக் கொடூரமாய் இருக்கிறது.சேரன் எனும் திரைப்பட இயக்குனர் இளைய  சமுதாயத்தினருக்கு காதலை மட்டும் விளக்கி படம் எடுக்கவில்லை.பல நல்ல சமுதாய கருத்தையும், அவலத்தையும் எடுத்து இளைய சமுதாயத்திடம் கொண்டு சேர்த்தவர் . இன்று அவரின் புகழ் வெளிச்சம் அவரின் கண்களையே பறித்துக் கொண்டிருக்கிறது. இது அவரின் குடும்ப  விசயமாய் இருப்பதால் இதனை பற்றி  ஊடகங்கள் இனி எழுதாமல் இருந்தாலே அவருக்கு வெற்றி தான் .


இது ஒரு பக்கம் இருக்க , சகலகலா வல்லவர் என புகழப்படும் டி .ஆர் . தன்னுடைய மகன் சிம்புவின் காதலை பற்றி கருத்தை பதிவு செய்தார்.அவருக்கும் உள்ளே ஒரு தகப்பன் இருப்பதை வெளிக்கொணர்ந்துள்ளார்.சமீபத்தில் ஆர்யா சூர்யா திரைபடத்தின் பாடல் வெளியிடு நிகழ்ச்சியில் அவரின் ஆதங்கம் தெரிகிறது.


விழாவில் டி.ராஜேந்தர் பேசியதாவது: “என் மகன் யாரைக் காதலித்தாலும் எந்த நடிகையை காதலித்தாலும் நான் மருமகளாக ஏற்பேன் என்று ஒரு பத்திரிகையாளரிடம் சொன்னேன். அவரோ ஒரு குறிப்பிட்ட நடிகையின் பெயரைப் போட்டு அவரை நான் மருமகளாக ஏற்பேன் என்று சொன்னதாக செய்தி வெளியிட்டார். ஆனால் நான் எந்த நடிகையின் பெயரையும் சொல்லவில்லை. 


இப்படித்தான் முன்பு நயன்தாரா என்ற நடிகையையும் என் மகனுடன் சேர்த்து எழுதினார்கள். ஆனால் அந்த நடிகையோ வேறொருவருடன் சேர்ந்து, அவர்களது குடும்பத்தை பிரித்து, இப்போது புதிதாக ஒருவருடன் என இப்படி செல்வதையெல்லாம் நீங்கள் எழுதுவது கிடையாது. ஆனால் என் மகன் சிம்பு அடுத்து ஒரு நடிகையை காதலிக்கிறான் என்று மட்டும் தொடர்ச்சியாக எழுதுறீங்க...உங்களுக்கு ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன். நாங்களும் மனுஷங்க தான். அதை மறந்துட்டு இஷ்டத்துக்கு இப்படி எழுதாதீங்க.
கோடிக்கணக்குல பணம் சம்பாதிச்சாலும் இப்போதும் கூட அவன் எங்களை மதிக்கிறான். ஐ.டி கம்பெனியில 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிட்டாலே பசங்க அப்பாவையும், அம்மாவையும் மதிக்காம இருக்கிற இந்த காலத்துல என்னோட பையன் என்னை மதிக்கிறான். அந்தளவுக்கு அவன் ரொம்ப நல்லவன். இதுதான் தமிழ்ப்பண்பாடு அப்படிப்பட்ட ஒரு நல்ல பையன் சிம்பு என்று கண்கலங்கியவாரே உணர்ச்சிவசப்பட்டார் டி.ராஜேந்தர்.


நல்லதே நடக்கட்டும் .


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

1 comment:

  1. உண்மையான தகவல்... நல்லதே நடக்கட்டும் .

    ReplyDelete

கருத்து மேடை