குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Friday 2 August 2013

சுடப்பட்ட பதிவல்ல இது - கூகுள் ஆண்டவருக்கு நன்றி .

வணக்கம் 

ஆடி மாதம் நடக்கும் அம்மன் திருவிழா தமிழ்நாட்டில் அணைத்து இடங்களிலும் அம்சமாய் நடந்துக் கொண்டிருக்கிறது . நான் இருக்கும் அவனியாபுரத்தில் ( மதுரை ) , மந்தை திடலில் ( இப்போது அது தான் அவனியாபுரம் பஸ் ஸ்டான்ட் ) அமைந்திருக்கும் அம்மன் கோவிலில் திருவிழாவின் அட்டகாசம் ஆரம்பித்திருந்தது.


இன்று காலை வழக்கம் போல் வீட்டிலுருந்து அலுவலகம் கிளம்பினேன்.பஸ் ஸ்டான்ட் தாண்டி வரும் போது , ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.ஒளவையார் 1 லிருந்து 10 வரை வரிசைப்படுத்தி முருகனை பற்றி பாடிகொண்டிருந்தார் . எப்போதும் போல் கேட்டு விட்டு மறந்து போய் விடுவது வழக்கமாகி இருந்தது.இன்று அப்படி  நடக்க வில்லை . காலையில் என்னுடைய குழந்தை ( மேடம் இப்போ LKG ) ஆத்திச்சுடி சொல்லிகொண்டிருந்தது. அறஞ்செய விரும்பு  முதல் அஃகஞ் சுருக்கேல்.வரை படித்துகொண்டிருந்தார். தொடர்ச்சியாய் ஒளவையார்  எனக்குள் தொடர்ந்தார்.நமக்கும் அதுக்குப் பிறகு எதுவும் தெரியவில்லை . சரி ஆத்திச்சுடி 108 அனைத்தும் இன்று பதிவாக போடலாம் என்று நினைத்து கூகுள் ஆண்டவரிடம் தேடச்சொன்னேன் . அவரும் எப்போதும் போல் வினாடிகளில் லட்சக்கணக்கில் விடைகளை அளித்தார்.


என்ன ஒரு ஆச்சரியம் ஒரு தளம் என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒரு நல்ல பதிவை நாம போடலாம்னு நெனைச்சது எவ்வளவு பெரிய குத்தம்னு தோணிச்சு .( நீ எல்லாம் போடறது நல்ல பதிவு ? - உங்க மைண்ட் வாய்ஸ் ) 2008 ல் இரண்டு பேரின் பங்களிப்பில் ஒரு  வலைப்பதிவு இருக்கிறது . தமிழன் ஆச்சரிய ப்படும் அளவிற்கு  தமிழ் பற்றியும் , தமிழின் எழுத்தைப் பற்றியும் பல தொகுப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.2010 க்கு பிறகு தொடர்வது இல்லை என நினைக்கிறேன்.தல முகவரி  தளம் தான்  http://tamiltechy.blogspot.in  
 
படித்துப் பாருங்கள் பரவசம் அடையலாம் .

தல  அஜித் இப்போ விரும்பி படிக்கும் நூல் இந்த ஆத்திச்சுடி தானாம் .



ஆத்திச்சுடி மொத்தம் 108:- படிச்சு வசிக்கிறது நல்லது .

1. அறஞ்செய விரும்பு.

2. ஆறுவது சினம்.

3. இயல்வது கரவேல்.

4. ஈவது விலக்கேல்.

5. உடையது விளம்பேல்.

6. ஊக்கமது கைவிடேல்.

7. எண்ணெழுத் திகழேல்.

8. ஏற்ப திகழ்ச்சி.

9. ஐய மிட்டுண்.

10. ஒப்புர வொழுகு.

11. ஓதுவ தொழியேல்

12. ஒளவியம் பேசேல்.

13. அஃகஞ் சுருக்கேல்.

14. கண்டொன்று சொல்லேல்.

15. ஙப்போல் வளை.

16. சனிநீ ராடு.

17. ஞயம்பட வுரை.

18. இடம்பட வீடெடேல்.

19. இணக்கமறிந் திணங்கு.

20. தந்தைதாய்ப் பேண்.

21. நன்றி மறவேல்.

22. பருவத்தே பயிர்செய்.

23. மண்பறித் துண்ணேல்.

24. இயல்பலா தனசெயேல்.

25. அரவ மாட்டேல்.

26. இலவம்பஞ்சிற் றுயில்.

27. வஞ்சகம் பேசேல்.

28. அழகலா தனசெயேல்.

29. இளமையிற் கல்.

30. அறனை மறவேல்.

31. அனந்த லாடேல்.

32. கடிவது மற.

33. காப்பது விரதம்.

34. கிழமைப் படவாழ்.

35. கீழ்மை யகற்று.

36. குணமது கைவிடேல்.

37. கூடிப் பிரியேல்.

38. கெடுப்ப தொழி.

39. கேள்வி முயல்.

40. கைவினை கரவேல்.

41. கொள்ளை விரும்பேல்.

42. கோதாட் டொழி.

43. கௌவை அகற்று.

44. சான்றோ ரினத்திரு.

45. சித்திரம் பேசேல்.

46. சீர்மை மறவேல்.

47. சுளிக்கச் சொல்லேல்.

48. சூது விரும்பேல்.

49. செய்வன திருந்தச்செய்.

50. சேரிடமறிந்து சேர்.

51. சையெனத் திரியேல்.

52. சொற்சோர்வு படேல்.

53. சோம்பித் திரியேல்.

54. தக்கோ னெனத்திரி.

55. தானமது விரும்பு.

56. திருமாலுக் கடிமைசெய்.

57. தீவினை யகற்று.

58. துன்பத்திற் கிடங்கொடேல்.

59. தூக்கி வினைசெய்.

60. தெய்வ மிகழேல்.

61. தேசத்தோ டொத்துவாழ்.

62. தையல்சொல் கேளேல்.

63. தொன்மை மறவேல்.

64. தோற்பன தொடரேல்.

65. நன்மை கடைப்பிடி.

66. நாடொப் பனசெய்.

67. நிலையிற் பிரியேல்.

68. நீர்விளை யாடேல்.

69. நுண்மை நுகரேல்.

70. நூல்பல கல்.

71. நெற்பயிர் விளை.

72. நேர்பட வொழுகு.

73. நைவினை நணுகேல்.

74. நொய்ய வுரையேல்.

75. நோய்க்கிடங் கொடேல்.

76. பழிப்பன பகரேல்.

77. பாம்பொடு பழகேல்.

78. பிழைபடச் சொல்லேல்.

79. பீடு பெறநில்.

80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.

81. பூமி திருத்தியுண்.

82. பெரியாரைத் துணைக்கொள்.

83. பேதைமை யகற்று.

84. பையலோ டிணங்கேல்.

85. பொருடனைப் போற்றிவாழ்.

86. போர்த்தொழில் புரியேல்.

87. மனந்தடு மாறேல்.

88. மாற்றானுக் கிடங்கொடேல்.

89. மிகைபடச் சொல்லேல்.

90. மீதூண் விரும்பேல்.

91. முனைமுகத்து நில்லேல்.

92. மூர்க்கரோ டிணங்கேல்.

93. மெல்லினல்லாள் தோள்சேர்.

94. மேன்மக்கள் சொற்கேள்.

95. மைவிழியார் மனையகல்.

96. மொழிவ தறமொழி.

97. மோகத்தை முனி.

98. வல்லமை பேசேல்.

99. வாதுமுற் கூறேல்.

100. வித்தை விரும்பு.

101. வீடு பெறநில்.

102. உத்தம னாயிரு.

103. ஊருடன் கூடிவாழ்.

104. வெட்டெனப் பேசேல்.

105. வேண்டி வினைசெயேல்.

106. வைகறைத் துயிலெழு.

107. ஒன்னாரைத் தேறேல்.

108. ஓரஞ் சொல்லேல்.


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

2 comments:

கருத்து மேடை