குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)
Showing posts with label ரத்தம். Show all posts
Showing posts with label ரத்தம். Show all posts

Saturday, 9 March 2013

கமெண்ட் போடாதவங்க ரத்தம் கக்கியா சாவாங்க ?



 வணக்கம்


கலியுகம் போய் வலையுகம் வந்தாலும் , கலியுக காலத்திற்கு முன்னிலிருந்து ஏதோ ஒரு வடிவத்தில் ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன் , ஒரு நோட்டீஸ் விநியோகம் செய்யப்படும் .அதில் இதை படித்தவர்கள் , இதே போல் நூறு நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்யவேண்டும்.இதனை உதாசீனப் படுத்தினால் சில நாட்களில் ஒரு  கெட்டக் காரியம் ஒன்று நடக்கும் என்று எச்சரிக்கை மணி வேறு.நாற்பதை நெருங்கிய நண்பர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.அதற்க்கு அடுத்த தலை முறைக்கு மொபைலில் இது போல , இதனை இத்தனை பேருக்கு farward செய்ய வேண்டும் என்று.இது இன்றும் நின்ற பாடில்லை . இது வேறு மாதிரி ,காலத்திற்கு ஏற்ற மாற்றம் .  முகப்புதகத்தில் ஒரு செய்தி போடுவார்களாம் . அதற்க்கு நாம் கமெண்ட் போட வேண்டும்.போடாத பட்சத்தில் .......




 இதோ என் முகப்புதகத்தில் வந்த செய்தி .......



 இது நிஜமாக நடந்த விஷயம், அலட்சியம் செய்யாதீர்

கண்டமன்னூர் பக்கத்தில் உள்ள காரமடை கோவிலில் சாமி கும்பிட சென்ற தம்பதியினர் கோவில் வளாகத்தில் இரண்டு மாத குழந்தையை வைத்துவிட்டு சாப்பிட்டு கைகழுவி விட்டு பார்த்த அந்த தம்பதியினர் அதிர்ச்சியில் உறைந்தனர், அங்கு அந்த கோவிலுக்கு சொந்தமான பாம்பும் , அந்த இரண்டு மாத குழந்தையும் பேசிக்கொண்டு இருந்தனர், இவர்கள் வருவதை பார்த்த அந்த பாம்பு இவர்களிடம் 


"இப்பொழுது நீங்கள் பார்த்த விஷயத்தை ஸ்டேடஸ்-ஆ போடுங்க, அதை படிப்பவர்கள் லைக் போட்டு சேர் செய்யவேண்டும் அப்படி செய்தால் லைக், சேர் செய்த 15 நாட்களில் அவர்கள் குடும்பத்திற்கு நல்லது நடக்கும்" என்று சொல்லி அந்த பாம்பு மறைந்து விட்டது.....


உடனடியாக அந்த தம்பதியினர் ஸ்டேடஸ் போட்டனர், அவர்கள் போட்டு 12 நாட்களில் அவர்களுக்கு சொந்தமான வீட்டின் மீது இருந்த கேஸ் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது
இதை படித்து விட்டு லைக் ,சேர் செய்யாமல் அலட்சியபடுத்திய பட்டுகோட்டையை சேர்த்த பரந்தாமன் 2 நாட்களில் ரத்தம் கக்கி செத்தான்.



மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா