வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம்,
நம்ம கந்தசாமி ஒரு சமயம் கடற்கரைக்கு போனார்.ஆறு மணி நேரம் காற்று வாங்கினார்.வீட்டிற்க்கு வந்து பொண்டாட்டி,பிள்ளைகள் கிட்ட நல்ல காத்து வாங்கினேன் அற்புதமா இருந்துச்சு , பரவசத்தோடு சொன்னார்.அவரு சம்சாரம் அவரோட பையன் ரெண்டு பெரும் வாங்கின காத்து எங்களுக்கு கொடுக்க முடியுமா அப்படின்னு கேட்க , கண்டிப்பா முடியாது , அதுக்கு அவரு பையன் அப்பா காத்துக்கு எவ்வளவு பணம் கொடுத்து வாங்க ரெடியா இருந்தாலும், அத வாங்கவும் முடியாது, நம்மால கொடுக்கவும் முடியாது , அதனால இனிமே கடற்கரைக்கு போனா உருப்படியா எதாவது வாங்கிட்டு வாங்க.
ஒரு வார கால இடைவெளில மறு படியும் போனார். இந்த தடவ கடற் தண்ணிய ஒரு பக்கெட் முழுவதும் எடுத்து வந்தார்.அவரு பையன் அந்த தண்ணிய எடுத்து அவரு நிலத்தில பாத்திக் கட்டி அந்த தண்ணிய அதுல வச்சார்.சூரிய ஒளி பட்டு தண்ணி ஆவி ஆயி உப்பா மாறுச்சு.கந்தசாமிக்கு சந்தோசமா இருந்துச்சு . அவரு பையன் இனிமே கடலுக்கு போனா இதுக்கு மேலயும் யோசிங்க.
அடுத்த வாரத்தில மறுபடியும் போனார்.இந்த முறை பெரிய வலை எடுத்துப் போனார்.நெறைய மீன் மாட்டிச்சு , ரொம்ப நிறைவா வீட்டிற்கு வந்தார்.அவரு எடுத்து வந்த மீனை நல்ல விலைக்கு வித்து ,வீட்டிற்கு தேவையான பொருள்கள வாங்கிப் போட்டார்.இந்த முறை பையன் எதுவும் சொல்லாம இருந்தார்.
ரெண்டு நாள் கழிச்சு மறுபடியும் கடலுக்கு போனப்ப எதுவும் கொடு போகல்ல.ஆனா ஒரு நம்பிக்கையோட கடலுக்குள்ள போனாரு.வெளிய முத்த எடுத்து வந்தாரு .
கந்தசாமிக்கு அப்பத்தான் வெளங்கிச்சு, கடலும் ,வாழ்க்கையும் ஒன்னு தான் எவ்வளவு முயற்சி எடுக்குரமோ அதுக்கு தகுந்த பலன் கிடைக்கும்
இல்லன்ன கடல்ல மட்டும் இல்ல ,வாழ்க்கை இதுலயும் காத்து மட்டும் கிடைக்கும் .
மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
No comments:
Post a Comment
கருத்து மேடை