இணையத்தில் எங்கு பாரத்தாலும் Why This கொலவெறி பரபரப்பாகவே காணப்படுகிறது. இந்தக் கொலவெறியக் கொண்டாடும் மக்கள் பலர் அறிந்திராத சில காட்சிப் படங்கள் இவை.
இவை சாதாரண இடங்களில் நடந்வை அல்ல. இலங்கை மற்றும் இந்திய நாடாளுமன்றங்களில் நடந்த சம்பவங்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எவ்வளவு கொலவெறியோடு அடித்துக் கொள்கின்றார்கள்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் 2011 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை, கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்சவினால் வாசிக்கப்பட்ட போது, அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் இவை.
பாராளுமன்றத்தின் Off Video கமெரக்களினால் படம் பிடிக்கப்பட்டிருந்தது. எனினும் அன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்த தொலைக்காட்சிகள் குறித்த வன்முறை சம்பவங்கள் தொடங்கப்பட்ட போது, உடனடியாக இதை தவிர்த்து கொண்டதுடன், வெற்று பாராளுமன்ற புகைப்படத்தை அதற்கு பதிலாக காண்பித்திருந்தது.
இது 'திருமண ஜோடிகள் இல்லாது, திருமண ரிஷப்ஷன் மண்டபத்தை மாத்திரம் படம்பிடிக்கும் காட்சிகளுக்கு ஒப்பானது' என வர்ணித்திருக்கும் Gossip Lanka இணையதளம், உண்மையாக அப்போது பாராளுமன்றில் என்ன நடைபெற்றது என்பதை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளது.
இனிவருவபவை இந்திய நாடாளுமன்ற அவைகளில் நடந்த குழப்பங்கள் தொடர்பாக தொலைக்காட்சிப் பதிவுகளில் வெளிவந்தவை.
இவ்வளவு சண்டை பாராளுமன்றங்களில் நடைபெறும் போது, குழாயடிச் சண்டைப் பெண்களைப் பற்றி மட்டும் குறைப்பட்டுக் கொள்வது ஏன்..?
நன்றி : 4 தமிழ் மீடியா
எல்லா நாடுகளிலும் நாடாளுமன்றங்களில் இதே வேலையத்தான் பண்ணுவாங்க போலிருக்கு... உங்கள் பதிவுகள் மேலும் பல வாசகர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பதிவுகளைப் பகிருங்கள்
ReplyDelete