குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday, 2 April 2012

கணக்கு விளையாட்டு -கணக்குபுலி எல்லாம் வாங்க 2

வணக்கம்

மிக நீண்ட நாட்களுக்குபிறகு மீண்டும் இன்று பதிவு இடுகிறேன்.மறுபடியுமா என்று அலற வேண்டாம்.விதி யாரை விட்டது.மேற்கண்ட தலைப்பில் கணித விளையாட்டிற்கு நல்ல வரவேற்பு வந்ததின் விளைவு மீண்டும் கணக்கு விளையாட்டு ( இதுக்கும் வரவேற்பு வருமா ) வந்தாலும் சரி , வராமல் போனாலும் , வாங்க நம்ம கணித விளையாட்டுக்கு போகலாம்.


1 ,கந்தசாமிக்கு நான்கு குழைந்தைகள்,மணி,சீதா, செல்வி,முத்து என்பன அவர்கள் பெயர்கள்.மணி மற்றும் சீதாவின் எடை 25 கிலோ , செல்வி மற்றும் முத்துவின் எடை 50 கிலோ சரியா. ஒரு முறை அவர்கள் ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது.ஆழமான ஆறு .எனவே நடந்து போக முடியாது.கரையில் படகு ஒன்று இருந்தது.ஆனால் படகோட்டி கிடையாது . நால்வருக்கும் படகு விட தெரியும்.ஆனால் ஒன்றாகப் போக முடியாது.ஏனெனில் அந்தப் படகு 50 கிலோ எடைக்கு மேல் கொள்ளாது.நால்வரும் எப்படி ஆற்றை கடப்பார்கள் .
 2 , பஞ்சு,பிஞ்சு,அஞ்சு,மஞ்சு நால்வரும் ஒரு நாள் வட்டமான மைதானத்தை சுற்றி நடக்கும் போட்டியில் கலந்துக் கொண்டார்கள்.மைதானத்தின் சுற்றளவு ஒரு மைல்.


மஞ்சு நடக்கும் வேகம் மணிக்கு 5  மைல்
பஞ்சு நடக்கும் வேகம் மணிக்கு  4  மைல்
அஞ்சு நடக்கும் வேகம் மணிக்கு 3  மைல்
பிஞ்சு நடக்கும் வேகம் மணிக்கு 2  மைல்மாலை நான்கு மணிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து நால்வரும் புறப்படுகிறார்கள்.நடந்துக் கொண்டே இருக்கிறார்கள் . மீண்டும் அந்த இடத்துக்கு அவர்கள் எப்போது ஒன்றாக வந்து சேர்வார்கள்.


 3 , மூன்று மயிலை மாடுகளும் நான்கு செவலை மாடுகளும் ஐந்து நாட்களில் கறக்கும் பால் - மூன்று செவலை மாடுகளும் ஐந்து மயிலை மாடுகளும் நான்கு நாட்களில் கறக்கும் பாலுக்குச் சமம்.

அதிகம் பால் கறப்பது எது - செவலை மாடா அல்லது மயிலை மாடா 


பதில்களை பின்னூட்டம் இடுங்கள் .அல்லது என்னுடைய  மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள்.என்னுடைய மின் அஞ்சல் முகவரி - cvashree@gmail.com    

மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா
 

5 comments:

 1. விடைகள்:

  1) முதலில் மணியும் சீதாவும் ஆற்றை கடப்பார்கள், பிறகு சீதா படகை திருப்பி கொண்டுவருவார்.
  பிறகு செல்வி ஆற்றை கடப்பாள்... பின் அங்கு இருக்கும் மணி படகை திருப்பி கொண்டுவருவார்.
  மறுபடியும் மணியும் சீதாவும் ஆற்றை கடப்பார்கள், பிறகு சீதா படகை திருப்பி கொண்டுவருவார்.
  பிறகு முத்து ஆற்றை கடப்பான்... பின் அங்கு இருக்கும் மணி படகை திருப்பி கொண்டுவருவார்.
  மறுபடியும் மணியும் சீதாவும் ஆற்றை கடப்பார்கள்.....

  2) 5 மணிக்கு.

  ReplyDelete
 2. 3m+4s [மூன்று மயிலை மாடுகளும் நான்கு செவலை மாடுகளும்]
  15m+20s [ஐந்து நாட்களில் கறக்கும் பால்]


  3s+5m [மூன்று செவலை மாடுகளும் ஐந்து மயிலை மாடுகளும்]

  12s+20m [நான்கு நாட்களில் கறக்கும் பால்]

  15m+20s=12s+20m [சமம்]

  20s-12s=20m-15m

  8s=5m [எட்டு செவலை மாடு கறக்கும் பாலை, ஐந்து மயிலை மாடுகள் கறந்து விடும்]

  ஃ மயிலை மாடுகள் தான் அதிகம் கறக்கும்!! [கரெக்டா நைனா...!!]

  ReplyDelete
 3. nan kanakkula pulitan eannana plikku kanakku tareiathu pimpilika pelappi...........

  ReplyDelete
 4. nan kanakkula pulitan eannana plikku kanakku tareiathu pimpilika pelappi...........

  ReplyDelete

கருத்து மேடை