குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Tuesday, 27 November 2012

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம்

வணக்கம்

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும்
அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

( Source : kgjawarlal.wordpress.com )

Monday, 19 November 2012

ஒற்றுமை இப்படியா இருக்கணும் ?

வணக்கம்
  1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம்
மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3. இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6. ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.

7. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.

8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.

10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.
 
 
 
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா  

Thursday, 15 November 2012

பழமையான , பாதுகாக்க வேண்டிய , அறிதான புகைப்படங்கள் - 2




வணக்கம்






                    Henry Ford, Thomos edison









                         Steve Jobs with Billgates







                          Chaplin with Gandhi








                                Mother Therasa and Diana







                         Gandhi with wife kasthuri




               
                          Last train Dhaka to Calcutta






                           Rabindranath Taagoor


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா


Wednesday, 14 November 2012

ஆரோக்யமா வாழணம்ன்னா லவ் பண்ணுங்கப்பா.......



வணக்கம்

காதலிப்பவர்களுக்கு கண் தெரியாது என்பது முட்டாள்களின் வாதம் என்று அதிரவைக்கின்றனர் ஆய்வாளர்கள். காதலில் விழுந்தவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்குமாம் அதற்கான ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும் என்று கூறி காதலர்களின் வாழ்வில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றனர் ஆய்வாளர்கள்.

கண்ட உடனே காதலில் விழுபவர்கள் சிலர். பேசி பழகிய பின் காதலிப்பவர்கள் சிலர் காதலில் 
 விழுந்துவிட்டால் அவர்களுக்கு இறக்கை முளைத்துவிடும். கண்களை திறந்து கொண்டே காதலிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். காதலிக்க ஆரம்பித்த உடன் அவர்களின் உடலில் நிகழும் ரசாயன மாற்றம் என்னென்ன என்று நிபுணர்கள் பட்டியிலிட்டுள்ளனர். நீங்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.

பட்டாம்பூச்சி பறக்கும்


உங்களுக்கான நபரை நீங்கள் கண்ட உடன் மச்சி இவதாண்ட உன் ஆளு என்று மூளை மணியடிக்க ஆரம்பித்து விடுமாம் ( அப்படியா?) அப்போது மூளையில் டோபமைன் எனப்படும் ரசாயனம் சுரக்குமாம். அது உடலுக்கு சக்தியை தருவதோடு மூளையையும் சுறுசுறுப்பாக்குகிறதாம். அதனால்தான் காதலிப்பவர்களின் கனவுகளில் வானவில் வருகிறது. அவர்களுக்கு இறக்கை முளைக்கிறது. அவர்கள் செல்லும் இடமெங்கும் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறது. ( இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பழைய பாரதிராஜா படத்தை பார்க்கலாம்)

உடல் மெருகேறும்


காதலிப்பவர்கள் உடல் கட்டுப்பாட்டோடு அழகாக இருக்குமாம். அவர்களின் உடலில் ஆட்டோமேடிக்காக neurotransmitter அதிகரிக்குமாம். அட்ரீனலின் உற்பத்தி சிறிதளவு குறையுமாம். அதனால் அவர்களுக்கு பசி உணர்வே ஏற்படுவதில்லை. ஜிம் போகாமலேயே உடலில், முகத்தில் ஒரு பளபளப்பு ஏறியிருக்குமாம். அதனால் காதலில் விழுந்தவர்களை பையன் ஒரு மார்க்கமாவே இருக்கான் என்னன்னு கவனிங்க என்று அப்பா, அம்மாவிடம் உறவினர்கள் உசுப்பேற்றி விடுகின்றனர்.

புத்திசாலியாவார்கள்


காதலிப்பவர்கள் முட்டாள்களா? யார் சொன்னது. அப்படி சொல்பவர்கள்தான் முட்டாள்கள், காதலின் அருமை தெரியாதவர்கள். காதல் உண்மையிலேயே முட்டாளாக இருப்பவர்களைக் கூட அறிவாளியாக்குமாம். காதல் வசப்பட்டவர்களுக்கு மூளை செல்களை புதிதாக வளரச் செய்யும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது என்று இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இளமை திரும்பும்


காதலிப்பவர்களுக்கு முதுமை ஏற்படாதாம். அவர்கள் என்றைக்கும் இளமையாக இருப்பார்களாம். அந்த அளவிற்கு அவர்களுக்கு இளமையை தக்கவைக்கும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் சுரக்குமாம். காதலிப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பதால் அவர்களுக்கு கவலை என்பதே ஏற்படாதாம்.

நோய் தாக்காது

காதலிப்பவர்களை விட ஜோடி கிடைக்காமல் தனியாக இருப்பவர்கள்தான் விரைவில் மரணத்தை தழுவுகின்றனராம். காதலிப்பவர்களுக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாதாம். ரொமான்ஸ் மூடில் இருப்பவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பு குறைவாகத்தான் சுரக்குமாம். காதலிப்பவர்களுக்கு இதயநோய் என்பதே ஏற்படாதாம்.

காதலிப்பவர்களுக்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதாம். இன்னமும் ஏன் வெயிட் பண்றீங்க,போய் சீக்கிரம் லவ் பண்ணுங்கப்பா!
 
 
 
 
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா     

Tuesday, 6 November 2012

துப்பாக்கி விஜய் ஒன் மேன் ஆர்மியா

வணக்கம்


 நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளி வர இருக்கும் சமயத்தில் அவரின் விசிறிகள் ஒரு S M S ஐ தட்டி விட்டிருக்கிறார்கள் . முதலில் அந்த S M S படித்துப் பாருங்கள் .லிஸ்ட்ல இல்லாத படம் எல்லாம் யாருக்கு என கேட்கக் கூடாது . 


குடும்பத்திற்கு -  ஆதி

அப்பாவிற்கு     -   குருவி

அம்மாவிற்கு    -  சிவகாசி

தங்கச்சிக்கு       -  திருப்பாச்சி

தம்பிக்கு             -   பகவதி

அக்காவிற்கு     -   தமிழன்

 அண்ணனுக்கு -   பத்ரி

மனைவிக்கு       -  பிரியமானவளே

பசங்களுக்கு      -   கில்லி

பொண்ணுங்களுக்கு  - குஷி

போலிசுக்கு       -  போக்கிரி

காதலர்களுக்கு  - காவலன்

நண்பர்களுக்கு  - பிரண்ட்ஸ்

காமெடிக்கு         -  சச்சின்

வில்லன்களுக்கு  -  அழகிய தமிழ் மகன்

தியாகத்துக்கு  -  ஷாஜகான்

ஆறு கோடி மக்களின் தளபதி எங்கள் இளைய தளபதி நடித்த துப்பாக்கி விரைவில் வருகிறது .


ஆல் இஸ் வேல் 




மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா


Monday, 5 November 2012

கழுதை, குரங்கு, நாய், மனிதன் - அதிக நாள் அல்லல் படும் உயிரினம்

வணக்கம் 



ஒரு கதை தான் ஆனாலும் உருப்படியாக இருக்கும் என நம்புகிறேன் .வாங்க கதைக்கு போகலாம் .



எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்கலாம், என்று சிந்தித்தார் கடவுள். எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் என்று முடிவு செய்தார் அவர்.
தன் இருப்பிடத்திற்கு எல்லா உயிரினங்களும் வரச் செய்தார்.

அவற்றைப் பார்த்து, உங்கள் ஒவ்வொருவருக்கும் முப்பது ஆண்டு ஆயுள் தருகிறேன். இந்த வாழ்நாள் போதும் என்பவர்கள் இங்கிருந்து சென்று விடலாம். குறை உடையவர்கள் இங்கேயே இருங்கள். தீர விசாரித்து அவர்கள்
குறையைத் தீர்த்து வைக்கிறேன், என்றார் அவர்.




  ஆகிய நால்வர் மட்டுமே அங்கே இருந்தனர். மற்ற எல்லோரும் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர்.




முதலாவதாக நின்றிருந்த கழுதையை அழைத்தார் கடவுள். உன் குறை என்ன? என்று கேட்டார்.




கடவுளே! என் நிலையைப் பாருங்கள். நான் நாள்தோறும் ஏராளமான சுமைகளைச் சுமந்து துன்பப் படுகிறேன். ஓய்வோ தூக்கமோ எனக்குக் கிடைப்பது இல்லை. எப்பொழுதும் பசியால் துன்பப் படுகிறேன். முதுகில் சுமையுடன் வரும் நான், தெருவோரம் முளைத்து உள்ள புற்களில் வாயை வைத்து விடுவேன். என்னை அடித்துத் துன்புறுத்துவார் என் முதலாளி. மகிழ்ச்சி கொடுமைகளை இல்லை. என் வாழ்க்கையே நரகம். இந்தக் கொடுமைகளை எல்லாம் என்னால் எப்படி முப்பது ஆண்டுகள் தாங்கிக் கொள்ள முடியும்? என் மீது கருணை கொண்டு என் ஆயுளைக் குறைத்து விடுங்கள், என்று கெஞ்சியது.




சரி! பன்னிரண்டு ஆண்டுகள் குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பதினெட்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள்.




இதைக் கேட்ட கழுதை மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது.




அடுத்ததாக இருந்த நாயை அழைத்தார் கடவுள் உன் குறை என்ன? என்று கேட்டார்.




கடவுளே நான் வலிமையுடன் நன்றாக மோப்பம் பிடிக்கும் திறமையுடனும் இருக்க வேண்டும். என் காதுகள் துல்லியமான சிறு ஓசையைக் கூடக் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு மதிப்பு. நான் முதுமையடைந்து தளர்ந்து விட்டால் எல்லோருமே என்னை வெறுக்கின்றனர். எனக்கு உணவும் கிடைப்பதில்லை, என்றது நாய்.


உனக்கு நான் தந்திருக்கும் வாழ்நாள் மிக அதிகம் என்று கருதுகிறாய். குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பன்னிரெண்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள்.




மகிழ்ச்சி அடைந்த நாயும் கடவுளை வணங்கிவிட்டுப் புறப்பட்டது.




குரங்கு கடவுளின் முன் குதித்து வந்து நின்றது. உனக்கு என்ன குறை? என்று கேட்டார், கடவுள்.




பல்லைக் காட்டியக் குரங்கு, கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது நீண்ட காலம் ஆயிற்றே. அவ்வளவு காலமா நாங்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டும்? உணவுக்காக நாங்கள் மனிதர்களிடம் பல்லைக் காட்டுகிறோம். நாட்டியம் ஆடுகிறோம். என்னென்னவோ செய்கிறோம். இருந்தாலும் எங்களுக்குக் கிடைப்பவை அழுகிப் போன பழங்கள் தான். முதுமை அடைந்து விட்டால் எங்களால் கிளைக்குக் கிளை தாவ முடியாது. அப்பொழுது எங்கள் நிலை மிகப் பரிதாபமாக ஆகி விடும். எங்களால் எந்தச் செயலும் செய்ய முடியாது. ஆகவே எங்கள் ஆயுளைக் குறையுங்கள், என்று வேண்டியது.




இனி உங்களுக்குப் பத்து ஆண்டுகள் தான் வாழ்நாள், என்றார் கடவுள்.




குரங்கும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது. கடைசியாக இருந்த மனிதனை அழைத்தார் கடவுள்.




உன் குறை என்ன? உனக்கு எவ்வளவு ஆயுளைக் குறைக்க வேண்டும்? என்று கேட்டார்.




கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது எங்களுக்கு மிகக் குறைந்த ஆயுள் ஆகும். அப்பொழுது தான் நாங்கள் ஏதேனும் ஒரு கலையை முழுமையாகக் கற்றிருப்போம். நாங்கள் குடியிருப்பதற்காக ஒரு வீட்டைக் கட்டி முடித்திருப்போம். எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு மகிழ்ச்சியாக நாங்கள் இருக்கத் தொடங்கும் காலம் அது.


நாங்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்குப் பயன் நுகரும் பருவம் அது. இந்தச் சூழலில் எங்கள் உயிரைப் பறிப்பது கொடுமை ஆகும். முப்பது ஆண்டு வாழ்நாள் என்பது எங்களுக்குப் போதவே போதாது. எங்களுக்கு அதிக ஆயுள் வேண்டும், என்று வேண்டினான் அவன்.




இங்கு வந்த நீ குறையுடன் சொல்லக் கூடாது. கழுதையிடம் பெற்ற பன்னிரெண்டு ஆண்டுகள், நாயிடம் பெற்ற பதினெட்டு ஆண்டுகள், குரங்களிடம் பெற்ற இருபது ஆண்டுகள் இங்கே உள்ளன. அந்த ஐம்பது ஆண்டுகளையும் நீ கூடுதலாகப் பெற்றுக் கொள்ளலாம். இனி உன் வாழ்நாள் எண்பது ஆண்டுகள். உனக்கு மகிழ்ச்சிதானே, என்று கேட்டார் கடவுள்.




மகிழ்ச்சிதான் என்ற அவன் கடவுளை வணங்கி விட்டுப் புறப்பட்டான். எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தார் கடவுள். கூடுதல் ஆயுள் கேட்டுப் பெற்ற மனிதனின் நிலைக்காக அவர் வருத்தப்பட்டார்.




கடவுளிடம் வரம் பெற்ற நாளிலிருந்து மனிதன் எண்பது ஆண்டுகள் வாழத் தொடங்கினான். முதல் முப்பது ஆண்டுகளை அவன் மகிழ்ச்சியாகக் கழித்தான். இந்த காலத்தில் தான் அவன் அறிவுள்ளவனாக, வீரனாக, பயனுள்ளவனாக வாழ்ந்தான். ஏனென்றால் கடவுள் அவனுக்கே கொடுத்த ஆயுள் இது. அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் கழுதையின் ஆயுள். அதனால் அவன் இந்தக் காலத்தில் கழுதையைப் போலப் பிறர் சுமைகளைத் தூக்கினான். சூழ்நிலையால் அடிபட்டுப் பசியாலும் பட்டினியாலும் வாடினான். நாற்பத்து இரண்டிலிருந்து அறுபது வரை நாயின் ஆயுள் அவனுடையது. இந்தக் காலத்தில் அவன், தான் சேர்த்த பொருள்களைக் காவல் காக்கும் நாய் போல வாழ்ந்தான். பிறர் அதைக் கைப்பற்ற வந்தால் குரைத்து வாழ்க்கை நடத்தினான். அறுபதிலிருந்து அவன் வாழ்க்கை குரங்கு வாழ்க்கைதான். தன் பேரக் குழந்தைகளிடம் குரங்கைப் போலப் பல்லைக் காட்ட வேண்டியதாயிற்று. கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல அவன் மகன் வீடு, மகள் வீடு என்று மாறி மாறிச் செல்ல வேண்டியதாயிற்று. அவனும் பல்லெல்லாம் விழுந்து கன்னம் ஒட்டிக் குரங்கைப் போலக் காட்சி அளித்துப் பிறகு இறந்தான்.
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா  

Saturday, 3 November 2012

டாஸ்மாக் கடைக்கு வந்த கடவுள் - கா ,கா , த , மொ நிறைந்த பதிவு

வணக்கம்


தலைப்பின் விளக்கம் முதலில் . காதல் , காமெடி ,தத்துவம் ,மொக்கை இதனை இப்படி முழுவதும் எழுதினால் பதிவ எப்போது படிப்பது , எனவே இப்போது வரும் திரைப் படத்தின் தலைப்பை போலவே சுருக்கமாக இருக்கிறது.பதிவை முழுவதும் படித்தால் கண்டிப்பாய் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் . மேட்டர்களை தந்த நண்பர்களுக்கு நன்றி . வாங்க போகலாம் .

---------------------------------------------------------------------------------------------------------------


 கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார் , நம் குடிமக்களை பார்த்து அப்படி என்ன தான் இருக்கு இந்த , TASMAC கடைக்குள் 'இங்க மட்டும் என்ன எப்பொவும் கூட்டம் எப்படி என  காண, உள்ளே சென்று ORDER செய்தார் , 5 BEER முழுவதும் முடிந்தது, ஒரு வித்தியாசமும் தெரியாததல் தொட்ர்ந்தார் , 2 FULL.. அப்பொழுதும் ஒண்ணும் ஆகல..

மீண்டும் ஆரம்பிதார் , 2 BEER..

கடைகாரர்க்கு ஆச்ச்ரியம் தாளாமல் , கேடடார் .. "யார் யா நீ?? இவ்வளவு சாப்பிட்டும் உனக்கு போதை எறல? மறுபடியும் கேட்குரே ?

" அதற்கு நம்ம கடவுள் " நான் தான் கடவுள் எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது" என்றார் .

கடைகாரர் : " தோ டா ..! தொரைக்கு இப்ப தான் ஏற ஆரம்பிச்சி இருக்கு..! நடக்கட்டும் ..! நடக்கட்டும் ..!"

------------------------------------------------------------------------------------------------------------


  கபீர் தாஸ் ஒரு நாள் பகலில் எழுதிக் கொண்டு இருக்கும் போது அவருடைய நண்பர் வந்து அமர்ந்தார். "எனக்கும் என் மனைவிக்கும் எப்போதும் வாக்குவாதம், சண்டை என என் வாழ்க்கையே நரகமாகி விட்டது. நான் என்ன செய்வது?" என்று கேட்டார்.

எழுதிக் கொண்டிருந்த கபீர்தாஸ் "சற்று உட்காருங்கள். இதை எழுதி முடித்துவிட்டு சொல்கிறேன்" என்றார். சொல்லிவிட்டு கபீர்தாஸ் உள்பக்கம் திரும்பி மனைவியை அழைத்து "சற்று விளக்கேற்றிக் கொண்டு வ
ருகிறாயா? என்னால் எழுத முடியவில்லை" என்று சொன்னார்.

நல்ல பகல் நேரம். வெளிச்சமாக இருக்கிறது. இவர் ஏன் விளக்கு கேட்கிறார் என்று ஒன்றும் புரியாமல் நண்பர் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மனைவி ஒரு சின்ன விளக்கு ஏற்றிக் கொண்டு வந்து கணவர் பக்கத்தில் வைத்து விட்டு போனார். கபீர்தாஸ் மறுபடியும் மனைவியை கூப்பிட்டு "எங்கள் இருவருக்கும் குடிக்க சற்று பால் கொண்டு வா" என்றார்.

கொஞ்சநேரத்தில் மனைவி இரண்டு டம்ளர்களில் பாலை கொண்டு வந்து கொடுத்து விட்டு உள்ளே போனார். கபீர் பாலை எடுத்து ஆனந்தமாக அருந்தினார். ஆனால் நண்பரால் குடிக்க முடியவில்லை. காரணம் பாலில் சர்க்கரை என்று நினைத்து அந்த அம்மையார் உப்பைப் போட்டு இருந்தார்.

உள்ளே இருந்து குரல் கேட்டது. "சர்க்கரை போதுமா? இல்லை, இன்னும் வேண்டுமா?"

"இல்லை, இல்லை, இதுவே அற்புதமாக இருக்கிறது" என்று சொன்ன கபீர் முழுவதுமாக குடித்து விட்டு காலி கோப்பையை கீழே வைத்தார்

பகலில் ஏன் விளக்கு என்று கணவர் மீது குற்றம் காணாத மனைவி, பாலில் ஏன் உப்பு போட்டாய் என்று மனைவி மீது குற்றம் காணாத கணவர். தம்பதிகள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். குற்றம் அற்ற பார்ட்னர் கிடைப்பது அரிது.

நண்பருக்கு விடை கிடைத்து விட்டது. கபீரை நமஸ்கரித்து விட்டு புறப்பட்டுவிட்டார்!
-------------------------------------------------------------------------------------------------------------
  அடுப்பில் ஒரு வடை சட்டியும்.. குக்கரும் பக்கத்து பக்கத்துல இருந்துச்சாம். அப்போ வட சட்டிய பாத்து குக்கர் சொன்னதாம்.. நீ இவ்ளோ கறுப்பா இருக்குறீயே.. செவப்பா இருந்தா எம்பூட்டு அழகா இருப்பேனுதாம்..

உடனே வடசட்டி, “ நான் கறுப்பா இருக்கறப்பவே இப்படி நீ இவ்ளோ விசில் அடிக்கிறீயே.. செவப்பா இருந்திருந்தா.. எவ்ளோ சேட்டை
--------------------------------------------------------------------------------------------------------------
  ஓப்பன் பண்ணினா.. ஒரு அழகான கிராமம். ஊர் பூராம் கரெண்ட் இருக்கு..!

அடேங்கப்பா.. ரொம்ப செலவாகும் போலிருக்கே.. சின்ன பட்ஜெட்ல பண்ற மாதிரி கத சொல்லுங்க தம்பி 
--------------------------------------------------------------------------------------------------------------
 எடுக்கிறவன் அழுதா
அது சினிமா.
பாக்குறவங்க அழுதா
அது சீரியல்
--------------------------------------------------------------------------------------------------------------
 மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

Thursday, 1 November 2012

நித்யம் + ஆனந்தம் = நித்யானந்தம் என்கிற நித்யானந்தா

வணக்கம்


ஒரு ஊர்ல ஒருத்தர் துறவி ஆகணும்னு முடிவெடுத்து இமயமலைக்கு சென்று பல துறவிகளை சந்தித்து ஒரு துறவியிடம் தான் சந்நியாசி ஆகலாம் என்று முடிவு செய்துள்ளேன். அதற்காக என்னிடம் உள்ள பணம், நகை விலை மதிக்க முடியாத செல்வங்கள் எல்லாம் இதில் எடுத்து வந்துள்ளேன் என்றாராம்.அதை பார்த்துக் கொண்டிருந்த சாமியார் ஒரே ஒட்டாம் எடுத்தார். பதறிப் போன அந்த மனிதர் துரத்திக் கொண்டு ஓடினார்.சில தூரம் ஓடின பிறகு மீண்டும் அதே இடத்தில வந்து சேர்ந்தார்.வந்தவர் இந்தா நீ கொண்டு வந்த செல்வங்கள் இதனை எல்லாம் விட்டு வந்தவனுக்கு இது போனவுடன் பதற்றம் வருகிறது என்றால் உனக்கு இன்னும் சந்நியாசம் பெரும் தகுதி வரவில்லை என்றாராம் .


இந்த கதை எல்லா ஆசைகளை விட்டுவிட்டதாய் நினைக்கும் போலி சாமியார்களை பற்றி நகைச்சுவைக்காக சொல்லப்பட்ட கதை . இந்த கதையில் வரும் மனிதாராக மட்டும் வாழ்கின்றார் என்று சமீபத்தில் வந்த செய்தி .

1)நித்தி குழு - மதுரையில் இருந்து கொண்டு சென்றவை
-------------------------------------------
( நித்தியின் பிரதம சீடர் திரு ரிஷிதயானந்தா தன் மனைவியுடன்
மதுரை வந்து வசூல் செய்ததது )

1)மூன்று வாஷிங் மெசின்
2)ஆறு பீரோ க்கள்
3)மெத்தையுடன் கூடிய இரண்டு கட்டில்
4)எட்டு மெத்தைகள்
5)ஒரு காவி மெத்தை (ரெம்ப அவசியம் )
6)அன்ன தானத்துக்கு வைத்து இருந்த மளிகை பொருள்கள்( மதுரை மளிகை கடையில் விற்று கொள்முதல் செய்யபெற்றது )
7)தங்க சிமாசனங்கள்
8)தையல் மெசின்
9)கியாஸ் அடுப்பு
10)ஏ சி மெசின்

2 )மதுரை ஆதீனத்திடம் தர மாட்டேன் என்று நித்தி வைத்து இருப்பது
-------------------------------------------------

சிவப்பு நிற பென்ஸ் கார் (மதுரை ஆதீனம் கார் -நித்தி வசம் )

3)நித்தியிடம் தர மாட்டேன் என்று மதுரை ஆதீனம் வைத்து இருப்பது
--------------------------------------------------

1)தங்க செங்கோல்
2)தங்க கீரிடம்
3)மூன்று பைக்குகள்
4)169 கிராம் தங்க காசுகள்
5)இன் வெர்டர்கள்

விளக்கு தூண் காவல் நிலையத்தில் இரு அசிங்ககங்களும் புகார் பதிவு செய்தனர்

மேலும் நித்தியின் பிரதம சீடர் திரு ரிஷிதயானந்தா " நாங்களும் கணக்கு பார்த்தால் மதுரை ஆதீனத்தின் சுவர் தரை எல்லாம் பெயர்க்க வேண்டியிருக்கும் "என்றார் காட்டமாக

நன்றி ஜூனியர் விகடன் 
 சீடரே இப்படி என்றால் இவர் எப்படி இருப்பார். 
 
மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா